– விளம்பரம் –
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை அதிரடி ஆல்ரவுண்டரான ஷிவம் துபே நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் 6 சிக்சர் என 66 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அதனால் அவருக்கு நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
தோனி கொடுத்த அறிவுரை : ஷிவம் துபே
டி20 போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியின் அதிரடி வீரராகவும், பகுதிநேர பந்துவீச்சாளராகவும் பார்க்கப்படும் அவர் தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதால் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்தி வருகிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார்.
– விளம்பரம் –
அதனைத்தொடர்ந்து இந்த 2026 டி20 உலககோப்பை தொடரிலும் தற்போது முக்கிய இடத்தை பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் தனது கரியரில் ஷார்ட் பாலுக்கு எதிராக இருந்த பிரச்சனை குறித்தும், அதற்கு தோனி எவ்வாறு உதவினார்? என்பது குறித்தும் சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய போது ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள சிரமத்தை சந்தித்தேன். என்னால் ஷார்ட் பிட்ச் பந்துகளை சரியாக அடிக்க முடியவில்லை. ஆனால் அதனை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன். அப்போது தோனி என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். அதாவது ஷார்ட் பிட்ச் பந்து வரும்போது அதை கண்டிப்பாக சிக்ஸருக்கு தான் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை ஒரு பவுண்டரியாக கூட விரட்டலாம்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அர்ஷ்தீப் சிங்கின் மாபெரும் சாதனையை சமன் செய்த வருண் சக்கரவர்த்தி – விவரம் இதோ
அப்படி இல்லையென்றால் ஒரு சிங்கிள் எடுத்து மறுமுனைக்கு செல்லலாம். அந்த பந்தில் விக்கெட் இழக்காமல் இருப்பது மட்டும்தான் முக்கியம். வேறு எதுவும் யோசிக்காதே என்று கூறினார். அவர் கூறிய அந்த அறிவுரை என்னை அந்த பிரச்சனையில் இருந்து மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்தது. தற்போது பந்துகளுக்கு மரியாதை கொடுத்து மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும் ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்