அந்த 2 பேரை சமாளிச்சா தான் இந்திய அணியை வீழ்த்த முடியும்.. தெ.ஆ வீரர்களுக்கு


ஷான் பொல்லாக்


– விளம்பரம் –

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது லீக் சுற்று போட்டிகளை நிறைவு செய்ய காத்திருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் வேளையில் அடுத்ததாக சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த சூப்பர் 8 போட்டிகளுக்கான ஒரு பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.

தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய : ஷான் பொல்லாக்

மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. அந்த வகையில் இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு அறிவுரை வழங்கும் விதமாக சில கருத்துக்களை அந்த அணியின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் பகிர்ந்துள்ளார்.

– விளம்பரம் –

அதில் அவர் கூறியதாவது : இந்த சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி சமபலம் வாய்ந்த போட்டியாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களின் திறனுக்கு ஏற்ப தென்னாப்பிரிக்க அணியிலும் வலிமையான வீரர்கள் இருக்கின்றனர். அதன்காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பலமான ஒன்றாக இருக்கும்.

ஆனால் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரையும் கவனமாக பார்த்து விளையாட வேண்டும். ஏனெனில் பும்ரா ஒரு வித்தியாசமான பௌலிங் ஆக்சனை கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் எப்பேர்பட்ட பவுலர் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் அவரை சமாளிக்க வேண்டிய வழியை கண்டறிந்தாக வேண்டும்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : திலக் வர்மா சூப்பர் 8 சுற்றில் இந்த விடயத்தை மாற்றியே ஆகனும்.. இல்லனா கஷ்டம் தான் – இர்பான் பதான் கருத்து

அதேபோன்று வருண் சக்கரவர்த்தியும் மிஸ்டரி ஸ்பின்னர் என்பதனால் அவரது பந்து வீச்சிலும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இவர்கள் இருவரையும் கலந்து விட்டால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியால் வெற்றிபெற முடியும் என ஷான் பொல்லாக் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்



Thank You

Related Posts

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

– விளம்பரம் – அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் 99…

அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்

– விளம்பரம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான பார்மை வெளிப்படுத்தி சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரராக இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

  • By admin
  • April 22, 2026
  • 6 views
சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா
.site-info { display: none; }