– விளம்பரம் –
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது லீக் போட்டியில் விளையாடியிருந்த கொல்கத்தா அணியானது சன் ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 227 ரன்கள் என்கிற இலக்கினை துரத்துகையில் அந்த அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டதால் சன் ரைசர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரகுவன்ஷிக்கு அறிவுரை கூறிய : வீரேந்திர சேவாக்
இந்த போட்டியில் சொந்த மண்ணில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்துள்ளதால் அந்த அணியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரகுவன்ஷி 29 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்து அசத்தினார். அவரை தவிர வேறு எந்த வீரரும் பெரிய அளவில் இந்த ஆட்டத்தில் கோபிக்கவில்லை.
– விளம்பரம் –
எனவே கொல்கத்தா அணியின் பேட்டிங் ஆர்டர் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக விளையாடிய ரகுவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் சேஸிங்கில் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என வீரேந்திர சேவாக் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் ரகுவன்ஷி மிகச் சிறப்பாக விளையாடினார்.
அதிலும் குறிப்பாக அவருடைய ஆட்டம் அந்த அணிக்கு மிடில் ஓவர்களில் பலமாக அமைந்தது. ஆனாலும் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை அவர் 18 முதல் 20 ஓவர்கள் வரை விளையாடியிருந்தால் அந்த அணி வெற்றி பெற்றிருக்கும். நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரன் ரேட்டை மிகவும் பாதிக்கும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணி சார்பாக சுனில் நரேனின் மாபெரும் சாதனையை தகர்த்த பின் ஆலன் – விவரம் இதோ
நான் ரகுவன்ஷியிடம் சொல்ல விரும்புவது ஒன்றுதான் சேஸிங்கின் போது விராட் கோலியிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் விராட் கோலி போன்று யாராலும் சேசிங் செய்ய முடியாது. எனவே அவரிடமிருந்து சேஸிங்கை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதை ரகுவன்ஷி கற்றுக்கொள்ள வேண்டும் என வீரேந்திர சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்