கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
நடிகர் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை விஜயின் ‘வாரிசு’ பட இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை விஜயின் ‘வாரிசு’ பட இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. இந்தப் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்துக்குப் பிறகு சல்மான் கான் நடிக்கும் படத்தை விஜயின் ‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். இது குடும்ப படமாக இருக்கும் என தெரிகிறது. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா நடிப்பில் அண்மையில் “Mana Shankara Vara Prasad Garu” தெலுங்கு படம் வெளியானது. அடுத்து ‘மூக்குத்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். ‘மண்ணாங்கட்டி’, ‘ஹாய்’ ஆகிய படங்கள் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.