மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான வெற்றிக்கு காரணமே இவங்கதான்.. வெற்றி பின்னர்





ரியான் பராக்


– விளம்பரம் –

கௌஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்ட வேளையில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தங்களது அணியின் முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

மும்பை அணிக்கெதிரான வெற்றி குறித்து : ரியான் பராக் மகிழ்ச்சி

அதனைதொடர்ந்து முதல் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களையும், வைபவ் சூரியவன்ஷி 39 ரன்களையும் குவித்தனர். பின்னர் தொடர்ந்து 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 11 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே குவிக்க 27 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.

– விளம்பரம் –

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது : முதல் மூன்று போட்டியிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. உண்மையிலேயே எங்களது அணியின் வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதைத்தவிர நான் அவர்களிடம் வேறு என்ன கேட்க முடியும்? ஒவ்வொரு போட்டியிலும் எங்களது வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றி பெற்று தருகின்றனர்.

எனவே அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேபோன்று இந்த ராஜஸ்தான் அணி உண்மையிலேயே பலம் வாய்ந்த அணி என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஏனெனில் இந்த அணியில் நல்ல வலிமையான ஒரு குரூப் உள்ளது. அனைத்து வீரர்களும் மிகவும் இளமையாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பதனால் மிகச் சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பேட்டிங் காரணம் இல்ல.. தப்பு இங்கதான் நடந்தது – பாண்டியா பேட்டி

வெளியில் அமர்ந்திருக்கும் வீரர்களும் பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்களை நம்பி ஆதரிக்கிறார்கள். எங்களை சுற்றி ஒரு நல்ல சூழல் நிலவுவதால் வெற்றியும் கிடைக்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பர்கர் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசுகின்றனர். 145 முதல் 150 கிலோமீட்டர் வரை அவர்கள் பந்துவீசுவதை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 10 views
கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 1 views
தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்
.site-info { display: none; }