– விளம்பரம் –
இந்திய அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றுப்போட்டியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் விளையாடியிருந்த ரிங்கு சிங் அதன்பின்னர் வீடு திரும்பினார்.
தந்தை இறந்த அடுத்த நாள் ரிங்கு சிங் எடுத்த முடிவு :
தனது தந்தையின் மோசமான உடல்நிலை காரணமாக ஜிம்பாப்வே போட்டிக்கு முன்னதாக தனது சொந்த ஊருக்கு சென்று தனது தந்தையை மருத்துவமனையில் பார்த்த பின்பு மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார். ஆனாலும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
– விளம்பரம் –
இவ்வேளையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி முடிந்த கையோடு ரிங்கு சிங்கின் தந்தை கல்லீரல் புற்றுநோய் காரணமாக நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரிங்கு சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தந்தை இறந்த செய்தியை அறிந்ததும் சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் சொந்த ஊரான அலிகாருக்கு சென்றடைந்தார். வெள்ளிக்கிழமை அவர் தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்ட கையோடு இரங்கல் நிகழ்விற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வேளையில் தந்தையை தகனம் செய்த கையோடு அடுத்த நாளே சனிக்கிழமையான இன்று அவர் இந்திய அணியுடன் இணைவார் என்ற முடிவை எடுத்துள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : 3 ஆவது கேப்டனாக டி20 உலககோப்பை போட்டிகளில் எய்டன் மார்க்ரம் நிகழ்த்தியுள்ள சாதனை – விவரம் இதோ
ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெறயிருக்கும் மிக முக்கியமான சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற உள்ளதால் இந்திய அணியுடன் அவர் இன்று இந்திய அணியுடன் இணைவார் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியின் நலன் கருதி அவர் எடுத்துள்ள இந்த முடிவு பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரம்