உங்களால் என் மானமே போச்சு.. இந்திய பிரண்ட்ஸ் என்னை கலாய்க்குறாங்க





ரிக்கி பாண்டிங்


– விளம்பரம் –

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது லீக் சுற்றினை நிறைவு செய்ய காத்திருக்கிறது. இந்த லீக் சுற்று போட்டிகளுக்கு பிறகு சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டிருந்தது.

உங்களால் என்னை கலாய்க்குறாங்க : ரிக்கி பாண்டிங் வேதனை

இந்த தொடரின் பி பிரிவில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியும் இடம் பிடித்திருந்தது. ஆனால் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பி பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த வேளையில் ஜாம்பவான் அணியாக பார்க்கப்படும் ஆஸ்திரேலியா அணி லீக் சுற்று போட்டிகளிலேயே வெளியேறியது.

– விளம்பரம் –

இப்படி டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளுடன் ஆஸ்திரேலிய அணி வெளியேறுவது இதுவே முதல்முறை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி அடைந்த இந்த தோல்விகளுக்கு பிறகு இந்திய நண்பர்கள் தன்னை கிண்டல் செய்வதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

ஆஸ்திரேலியா அணிக்கு இது மிகவும் மோசமான உலக கோப்பையாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே பல்வேறு வீரர்கள் காயம் அடைந்ததால் இந்த அணி சிறந்த அணியாக இல்லை என்பதை உணர்ந்தேன். ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியதற்கு பிறகு கடந்த சில நாட்களாகவே இந்திய நண்பர்களிடமிருந்து நான் பல்வேறு கேலி, கிண்டல்களை சந்தித்து வருகிறேன்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : ஹாட்ரிக் டக்.. டி20 உலககோப்பையில் 4 ஆவது வீரராக மோசமான சாதனையில் இணைந்த – அபிஷேக் சர்மா

பொதுவாக நான் அவர்களுக்கு கிண்டல் மெசேஜ் செய்து பழக்கப்பட்டவன். ஆனால் அவர்கள் தற்போது என்னை கிண்டல் செய்கிறார்கள். இதுபோன்ற பெரிய தொடரில் விளையாடும் ஆரா கொண்ட அணியாக இந்த ஆஸ்திரேலிய அணி இல்லை என்று நான் நினைப்பதாக ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

– விளம்பரம் – அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் 99…

அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்

– விளம்பரம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான பார்மை வெளிப்படுத்தி சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரராக இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

  • By admin
  • April 22, 2026
  • 6 views
சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா
.site-info { display: none; }