சி.எஸ்.கே அணிக்கெதிராக விளையாடிய போது கண் கலங்கியது ஏன்?

ரவீந்திர ஜடேஜா

– விளம்பரம் –

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்த நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் சென்னை அணியில் இருந்து டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்பட்டார். ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு சென்ற வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்கு வந்திருந்தார். இந்த டிரேடிங் அப்போதே பெரிய அளவில் பேசப்பட்டது.

போட்டியின் இடையே கண் கலங்கியது ஏன்? : ரவீந்திர ஜடேஜா விளக்கம்

ஏனெனில் சென்னை அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த ரவிந்திர ஜடேஜாவை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் மூன்றாவது ஆட்டமானது நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெர்சியுடன் ஜடேஜா விளையாடி இருந்தார்.

– விளம்பரம் –

இந்த போட்டியின் போது பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்த ஜடேஜா 3 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக விளையாடுவதை நினைத்து பவுண்டரி லைனின் அருகே ஜடேஜா கண்கலங்கியவாறும் நின்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கு பிறகு தான் ஏன் மைதானத்தில் கண் கலங்கினேன்? என்பது குறித்து ஜடேஜா சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த 12-13 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயணித்துள்ளேன். எனவே சி.எஸ்.கே அணியிலிருந்து பிரிந்தது முதலில் சற்று கடினமாக தான் இருந்தது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி சார்பாக எம்.எஸ் தோனியின் சாதனையை தகர்த்த ஜேமி ஓவர்டன் – விவரம் இதோ

அதை நினைத்து மைதானத்தில் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன். ஆனால் இதுவும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் என என்னை நானே தேற்றிக் கொண்டேன். ஆனாலும் நான் முதன் முதலில் கோப்பையை வென்ற அணிக்கே மீண்டும் திரும்பி இருப்பதும் நல்ல விடயம் தான் என ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }