– விளம்பரம் –
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் இணைந்து 14 விக்கெட்டுகளை கைப்பற்றி சம நிலையில் இருந்தார். இருந்தாலும் இந்த உலககோப்பை தொடரின் போது அவரது ஓவர்களில் அதிகளவு ரன்கள் கசிவதையும் பார்க்க முடிந்தது. இதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் அவரை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
வருண் சக்கரவர்த்தியிடம் புதுமை குறைந்து விட்டது : ரவிச்சந்திரன் அஷ்வின்
நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் என்னதான் விக்கெட்டுகளை வருண் சக்கரவர்த்தி எடுத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். இந்நிலையில் எதிர்வரும் இந்த 2026 ஐபிஎல் தொடரில் வருனின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில கருத்துக்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
– விளம்பரம் –
அந்த வகையில் அவர் கூறியதாவது : கே.கே.ஆர் அணியின் பந்துவீச்சு யூனிட் பார்த்து மற்ற அணிகள் பெரிய அளவில் கவலைப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் வருணிடம் புதுமை மற்றும் மேஜிக் ஆகிய இரண்டும் குறைந்துவிட்டதாக நினைக்கிறேன். அவர் மட்டுமின்றி சுனில் நரேனும் தற்போது பெரிய அளவில் பந்துவீச்சில் புதுமை காட்டாமல் இருக்கிறார்.
வருண் தற்போது தன்னுடைய கரியரின் முக்கிய கட்டத்தில் இருக்கிறார். எனவே சில புதிய பதில்களை அவர் கண்டறிய வேண்டிய நிலை வந்துள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்திற்கான காலகட்டம் வரும். தற்போது வருண் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் என்னை பொறுத்தவரை அவரது பந்துவீச்சில் புதுமை குறைந்துவிட்டது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : இதைமட்டும் பண்ணா போதும்.. மீண்டும் கில் இந்திய டி20 அணிக்கு வந்துடுவார் – புஜாரா நம்பிக்கை
அதனால் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் அவரை அதிரடியாக விளையாட முயற்சிப்பார்கள். சுனில் நரேனும் தன்னுடைய பௌலிங் ஆக்சன் காரணமாக வேகமாக பந்துவீச முடியாது. ஈடன் கார்டன்ஸ் ஒரு சிறிய மைதானம் எனவே இவர்கள் இருவரது பந்து வீச்சிலும் மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்து விளையாட முயற்சிப்பார்கள் என்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்