– விளம்பரம் –
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் அந்த தொடரின் முதலாவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் இருந்து வாய்ப்பு மறுக்கப்படவே அந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் இடையிலேயே தனது ஓய்வு முடிவை ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருந்தார்.
கம்பீர் மீது எனக்கு நிறைய மரியாதையை இருக்கு : ரவிச்சந்திரன் அஷ்வின்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அஸ்வின் அனுபவ வீரராக திகழ்ந்து வந்த வேளையில் திடீரென அவர் ஓய்வு முடிவை அறிவித்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. அதோடு பயிற்சியாளர் கம்பீர் அவரை அவமதித்து விட்டதாலே அவர் ஓய்வு முடிவை அறிவித்தார் என்றும் அப்போது பெரியளவில் பேசப்பட்டது.
– விளம்பரம் –
இந்நிலையில் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தது ஏன்? என்பது குறித்தும் கௌதம் கம்பீரின் செயல்பாடுகள் குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நான் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டேன். எனக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அந்த இடத்தில் விளையாடினார்.
அப்படி ஒரு முடிவை எடுத்ததுமே என்னுடைய காலம் இந்திய அணியில் முடிந்துவிட்டது என புரிந்து கொண்டேன். அதன் காரணமாகவே நான் உடனடியாக ஓய்வு முடிவை அறிவித்தேன். இப்படி என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்ததால் நான் எந்த விதத்திலும் கம்பீர் மீது அதிருப்தியும் அடையவில்லை, கோபமும் அடையவில்லை. ஏனெனில் கம்பீர் பற்றி பலருக்கும் பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர் எப்போதுமே தனிப்பட்ட வீரர்களை தாண்டி அணியின் வெற்றிக்கு முன்னுரிமை கொடுப்பவர்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : பிரதமருக்கு இணையான கவுரவம், மரியாதை இங்கு தோனிக்கும் கிடைக்குது – மைக்கல் வாகன் புகழாரம்
அணிக்காக சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதனால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம். எப்போதுமே தனி நபர்களை பாராட்டாமல் அணியை ஒட்டுமொத்தமாக பாராட்டக் கூடியவர் கௌதம் கம்பீர். இப்படி அணிக்கு தேவை என்னவோ அதற்காக நிற்கும் பயிற்சியாளரை நான் எப்போதுமே மதிக்கிறேன் என்று அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்