– விளம்பரம் –
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை கோப்பைகளை வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 கோப்பைகளை ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றி இருந்தது. ஆனால் அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளாகவே மும்பை அணி கோப்பையை கைப்பற்ற முடியாமல் பெரியளவில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா வந்ததிலிருந்து மும்பை அணி பல்வேறு மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரை மாற்றுங்க : ரவிச்சந்திரன் அஷ்வின்
நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கும் அந்த அணி சிறிய அணிகளுக்கு எதிராக கூட தோல்வியை சந்தித்தது விமர்சிக்கப்படும் விடயமாக மாறியிருந்தது. அதோடு கேப்டன் ஹார்டிக் பாண்டியாவிற்கு எதிராகவும் சில விமர்சனங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் மீண்டும் வலுவான கம்பேக் கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தயாராகி வருகிறது.
– விளம்பரம் –
இவ்வேளையில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதே சரியான முடிவாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : மும்பை அணியின் கேப்டன் பதவியை சூரியகுமார் யாதவுக்கு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை அது நடக்காது எனக்கு கவலை அளிக்கிறது.
ஏனெனில் தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் உலக கோப்பையை பெற்று தந்திருக்கிறார். எனவே அவரைத்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும். ஹார்டிக் பாண்டியாவை பொறுத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் சீசனிலேயே கோப்பையை பெற்று கொடுத்தார். அதேபோன்று இரண்டாவது சீசனிலும் இறுதிப்போட்டி வரை சிறப்பாக வழிநடத்தி இருந்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : 250 ரன்ஸ் அடிச்சாலும் நிச்சயமா தோப்பாங்க.. சன் ரைசர்ஸ் அணியை விமர்சித்த – ஆகாஷ் சோப்ரா
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வந்ததிலிருந்து அவர் கேப்டன்சி அழுத்தத்தை தாங்க முடியாமல் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறார். நிர்வாகத்தின் ஆதரவும், வீரர்களின் ஆதரவும் முழுமையாக கிடைத்தால் ஹார்டிக் பாண்டியாவால் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் தான் அணியின் கேப்டனாக சரியான தேர்வாக இருப்பார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்