– விளம்பரம் –
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வந்த 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய வேளையில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதோடு நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
சஞ்சு சாம்சனை புகழ்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் :
இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல மிகவும் முக்கியமான வீரராக துவக்க வீரரான சஞ்சு சாம்சன் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. இந்த தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தாலும் 321 ரன்களை குவித்து இந்த தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்த இந்திய வீரராக திகழ்ந்த அவர் தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
– விளம்பரம் –
இந்த தொடரின் ஆரம்பத்தில் அவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்த வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி தற்போது தொடர் நாயகனாக மாறியுள்ள அவரை இந்திய நாடு கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் 97, 89, 89 என்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் நினைத்திருந்தால் மூன்று சதங்களை எளிதாக அடித்திருக்கலாம் என்றும் ஆனால் அணியின் நலனுக்காக சுயநலமற்று அவர் விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு கிரிக்கெட் ரசிகராக சஞ்சு சாம்சனின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த டி20 உலக கோப்பை தொடரை பொறுத்தவரை அவர் எளிதாக மூன்று சதங்களை அடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அணியின் நலனுக்காக ரன் வேகத்தை குறைக்கக்கூடாது என்று தனது சாதனையை விட அணியின் வெற்றியே முக்கியம் என அதிரடியாக விளையாடி தனது சதத்தை தவறவிட்டார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : மன்னிப்பு கேட்டாலும் அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய ஐ.சி.சி – விவரம் இதோ
அவர் நினைத்திருந்தால் மிக எளிதாக 10 சிங்கிள்களை ஓடி சதத்தை பூர்த்தி செய்திருக்க முடியும். ஆனால் அணியின் ரன் ரேட்டை குறைய விடக்கூடாது என தனது தனிப்பட்ட சாதனையை கருத்தில் கொள்ளாமல் அணியின் நலனுக்காக அவர் விளையாடி உள்ளார் என சஞ்சு சாம்சனை ரவிச்சந்திரன் அஷ்வின் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்