கிறிஸ்துமஸ் தினத்தில் தமிழகத்தில் கொட்ட போகும் மழை  : வானிலை ஆய்வு மையம் தகவல் – Kumudam


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

30-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:

24 மற்றும் 25-ந்தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று முதல் 27ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Thank You

Related Posts

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு…

காற்றழுத்த தாழ்வு பாதை, 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப்பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

  • By admin
  • April 23, 2026
  • 6 views
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
.site-info { display: none; }