பாமக மாம்பழ சின்னம் வழக்கு.. நீதிமன்றத்தில் ராமதாஸ் – அன்புமணி தரப்புகள் பரபரப்பு வாதம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

பாமகவின் மாம்பழம் சின்ன வழக்கில், அன்புமணி தரப்பு இது நிழல் வழக்கு என வாதிட, உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.

பாமக
பாமக

பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ராமதாஸ் – அன்புமணி தரப்புகள் பரபரப்பு வாதம் நடந்தது.

பாமகவின் மாம்பழம் சின்னம் மற்றும் கட்சியின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இது ஒரு நிழல் வழக்கு என்று அன்பு மணி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, கட்சி அன்புமணி ராமதாஸ் வசமே உள்ளதாக அவரது தரப்பில் கூறப்பட்டது.

அன்புமணி தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் புதிதாக விசாரிக்க எதுவுமில்லை என்றும் வாதிடப்பட்டது. எனவே, இது ஒரு நிழல் வழக்கு என்றும், ராமதாஸ் பெயரில் யாரோ ஒருவரால் நடத்தப்படும் வழக்கு என்றும் குறிப்பிட்ட அன்புமணி தரப்பு, தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியது.

ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதிட வேண்டியுள்ளதால், விசாரணையைச் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினர். இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வேறு ஒரு தேதியில் விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட விவகாரங்களுக்குள் தாங்கள் இப்போது செல்ல விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

Thank You

Related Posts

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 11 views
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 10 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views
.site-info { display: none; }