பெட்ரோல், டீசல்  தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்: வதந்தி நம்ப வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம்  – Kumudam

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஹோட்டல், விடுதிகள் என பலரும் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவலாக செய்திகள் உலா வருகின்றன.

இதனால் நேற்று நள்ளிரவு முதலே சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் வாகன ஒட்டிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலையிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தன. வழக்கமாக 100 ரூபாய், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுபவர்கள் கூட டேங்குகளை முழுவதுமாக நிரப்பிச்செல்கின்றனர்.

தினசரி வேலைகள், அலுவலகப் பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே இப்படி முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்று பொதுமக்கள் கூறினர்.

வதந்திகளை நம்ப வேண்டாம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்

இந்நிலையில் வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL சில்லறை விற்பனை நிலையங்களும் (எரிபொருள் நிலையங்கள்) முழுமையாக வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு விநியோகிக்கப்படுகின்றன மற்றும் விநியோகம் சீராக தொடர்ந்து வருகிறது.வாடிக்கையாளர்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். பீதியடைந்து வாங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – மதுகேசவ் பொற்கண்ணன் வாழ்க்கை மிக அழகானது. இயல்பானதும்கூட. அதுசரி, வாழ்க்கையை எப்படி அழகாக வாழ்வது? இதுவொரு கடினமான கேள்வி. இதற்கு இலகுவான பதில் பாரதியிடம் இருக்கிறது. ‘அன்பென்று கொட்டு முரசே; அதில் ஆக்கம் உண்டாம்’…

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – மானா பாஸ்கரன் ‘நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்ற வள்ளுவன் சொல். கூடவே, ‘மழை பெய்வது பொதுநலம்; குடை பிடிப்பது சுயநலம்’ என்று சொன்ன தந்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

  • By admin
  • April 27, 2026
  • 14 views
காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 4 views
மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 11 views
ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

  • By admin
  • April 26, 2026
  • 9 views
சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
.site-info { display: none; }