வேகமெடுக்கும் ‘வேட்டுவம்’, ஏப்ரலில் வானம் விழா; மெருகேறும் `சார்பட்டா 2′- பா.ரஞ்சித் பரபர அப்டேட்ஸ்! | pa.ranjith’s vettuvam movie and his line up updates exclusively


“தங்கலான்’ படத்தை அடுத்து பா.ரஞ்சித்தின் அடுத்த அதிரடியான ‘வேட்டுவம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆனாலும் இன்னும் சில நாள்கள் படப்பிடிப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையே ‘சார்பட்டா பரம்பரை 2’வும் விரைவில் டேக் ஆஃப் ஆகிறது. இந்நிலையில் ‘வேட்டுவம்’ அப்டேட் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்…

ரஞ்சித்தின் கனவு படைப்பு ‘வேட்டுவம்’. அதனால்தான் கடந்த 2022ல் 75 வது கான் திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். அதில் புலி ஒன்றின் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அதன் பின் நடிகர்கள் பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ‘வேட்டுவம்’ படப்பிடிப்பை ஆரம்பித்தார் பா.ரஞ்சித்.

இந்தப் படத்தில் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், குரு சோமசுந்தரம், கலையரசன், ஷபீர், ஜான் விஜய், மைம் கோபி, லிஸி ஆண்டனி, லிங்கேஷ், சாய் தீனா என பலரும் நடிக்கின்றனர். கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கிறார். இதற்கு முன் ‘பொன்னியின் செல்வ’னில் வானதியாக நடித்தவர். இந்த படத்திலிருந்து அவரது பழைய டீம் இல்லை. ‘பாட்டல் ராதா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘தங்கலா’னுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் ஹீரோ தினேஷின் ஹேர் ஸ்டைலும், தோற்றமும் வைரலானது. ஆர்யாவின் கட்டுறுதியான தோற்றமும் பேசப்பட்டது. அதிரடியாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் தொடங்கிய ரஞ்சித், அதன்பின் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம் என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். ரஞ்சித்தின் படங்களில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக ‘வேட்டுவம்’ இருக்கும் என்கிறார்கள். சயன்ஸ் ஃபிக்ஷன், ஃப்யூச்சரிஸ்டிக் டிராமா ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தாலும் இன்னும் சில நாள்கள் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு இருக்கிறது என்கிறார்கள். படத்தை ஜூலை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. இதற்கிடையே வரும் ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடுகின்றனர். ‘வானம் கலைவிழா’ சென்னையில் நடக்கிறது. கூகை இயக்கம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது. இதில் பி.கே. ஃபிலிம் பெஸ்டிவல் 2026க்கான திரையிடல்களும் நடக்கிறது. ஆக, ஏப்ரலில் ரஞ்சித்தின் கவனம் இதில் இருக்கும் என்கிறார்கள்.

அதைப் போல 40 படங்களை தாண்டிவிட்ட ஆர்யாவின் திரைப்பயணத்தில் ‘சார்பட்டா பரம்பரை’க்கு பிறகு ‘வேட்டுவ’மும் அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் படமாக இருக்கும் என்ற பேச்சும் இருக்கிறது. ‘சார்பட்டா பரம்பரை 2’வின் திரைக்கதையை தமிழ் பிரபாவும் இணைந்து எழுதி வருகிறார். ஆர்யாவிற்கு அடுத்து திரைக்கு வரும் படமாக ‘மிஸ்டர் எக்ஸ்’ உள்ளது. ‘எஃப்.ஐ.ஆர்’ மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். உளவாளி நிறுவனம் ஒன்றில் நடக்கும் கதை இது. இதனை அடுத்து அவர் ‘அனந்தன் காடு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.



Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }