‘ஜனநாயகன்’ படத்திற்கு புதிய சிக்கல்! ஓடிடி உரிமத்தை ரத்து செய்த அமேசான்  – Kumudam

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், தணிக்கைத் துறையின் சான்றிதழ் பெறுவதில் நிலவும் இழுபறி காரணமாகப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. பட வெளியீடு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், தணிக்கை வேலைகள் இன்னும் முடிவடையாதது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்காகப் பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள், தற்போது தாங்கள் முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி படம் வெளியாகாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் ஈடுகட்ட அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மிகவும் அதிர்ச்சிகரமான தகவலாக, இப்படத்தின் ஓடிடி உரிமையைச் சுமார் 120 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தஅமேசான் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வெளியீட்டிற்கு முன்பே முழுத் தொகையும் வழங்கப்பட்டுவிடும். ஆனால், தணிக்கைச் சிக்கல் நீடிப்பதாலும், படம் எப்போது வரும் என்ற தெளிவற்ற சூழல் நிலவுவதாலும் அந்த நிறுவனம் பின்வாங்கியதாகத் தெரிகிறது.

தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த பிறகே இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அந்த நடைமுறைகள் முடிவடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால், அதுவரை காத்திருக்க விரும்பாமல் ஓடிடி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது..

Thank You

Related Posts

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை  ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக வலைதளங்களில் தொடர் பதிவிட்டு  வைரலாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குநர்…

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 12, 2026 9:21 PM IST Actor Death | மக்களின் இதயங்களைக் கவர்ந்த திறமையான நடிகர் ஒருவர் கோரமான விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தி18 திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து மக்களின் இதயங்களைக் கவர்ந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 1 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam
.site-info { display: none; }