வருண் சக்கரவர்த்தி பணிச்சுமை அழுத்தத்தில் இருக்கிறாரா? பவுலிங் கோச்

மோர்ன் மோர்கல்

– விளம்பரம் –

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு லீக் ஆட்டங்களிலும் விளையாடியிருந்த அவர் ஓவருக்கு 6.88 என்கிற சராசரியுடன் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

வருண் சக்கரவர்த்தி குறித்து பேசிய : மோர்னே மோர்கல்

இதன் காரணமாக எதிர்வரும் சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும் அதன்பின்னர் நடைபெற இருக்கும் இறுதிகட்ட போட்டிகளிலும் அவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்று பலரும் அவரது பந்துவீச்சை பாராட்டி வருகின்றனர். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

– விளம்பரம் –

அதோடு அவர் தொடர்ச்சியாக 17 ஆட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங்கின் சாதனையும் சமன் செய்திருந்தார். ஆனாலும் கடந்த ஓராண்டாகவே தொடர்ச்சியாக ஓய்வின்றி போட்டிகளில் விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி பணிச்சுமை காரணமாக அழுத்தத்தில் இருக்கிறாரா? என்ற கேள்வியும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறுகையில் : உண்மையிலேயே வருண் சக்கரவர்த்தி எங்களது அணியுடன் ஸ்ட்ரைக் பவுலர். அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

– விளம்பரம் –

மற்ற பந்துவீச்சாளர்களும் சரியான நேரத்தில் எதிரணிகளுக்கு அழுத்தத்தை கொடுப்பதால் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அதேபோன்று போட்டியின் ஒரு சில நேரங்களில் எதிரணியினர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது அந்த முமென்ட்டத்தை உடைக்கும் வீரராக வருண் சக்கரவர்த்தி சரியான இடங்களில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் யார் சூப்பர் 8 சுற்றில் விளையாடனும்? – தீப்தாஸ் குப்தா பதில்

தொடர்ச்சியாக விளையாடுவதால் அவருக்கு எந்த ஒரு பணிச்சுமையும் கிடையாது. குறிப்பாக ஒரு வடிவ போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க எங்களிடம் விருப்பம் தெரிவித்து வருகிறார். அதன் காரணமாகவே அவர் தொடர்ந்து விளையாடி வருவதாகவும் மோர்னே மோர்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }