– விளம்பரம் –
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காமல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்று ஆட்டத்திற்குள் நுழைந்தது.
திலக் வர்மாவுக்கு அட்வைஸ் வழங்கிய : முகமது கைப்
ஆனால் சூப்பர் 8 சுற்றில் தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்தது. இதன்காரணமாக அரையிறுதி செல்லும் வாய்ப்பும் கடினமாகியுள்ளது. அடுத்ததாக நடைபெறயிருக்கும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 5 போட்டிகளில் விளையாடி 107 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 118 ஆக இருக்கிறது. இதன் காரணமாக அவரது ஆட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்னாள் வீரர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் திலக் வர்மா விராட் கோலியின் பாணியை பின்பற்றி விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : திலக் வர்மாவுக்கு தனி ஸ்டைல் உள்ளது அதற்கு ஏற்றாற்போன்று அவர் விளையாட வேண்டும். தற்போதைய இந்திய அணியில் அவருக்கு நிதானமாக விளையாடவும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை நீக்காமல் சஞ்சு சாம்சனை கொண்டு வாங்க.. இவரை தூக்குங்க – பார்த்திவ் பட்டேல் கருத்து
ஆனால் அதிரடியாக விளையாட முயன்று அவர் ஆட்டமிழந்து வருகிறார். என்னை பொறுத்தவரை திலக் வர்மா போட்டியின் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடாமல் விராட் கோலி போன்று முழு 20 ஓவர்களையும் நின்று விளையாடும் யுக்தியை கையிலெடுக்க வேண்டும். அப்படி அவர் விளையாடினால் ஆரம்ப கட்டத்தில் குறைவாக ரன் குவித்தாலும் பின்னால் அதனை அதிரடியாக மாற்றி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்