கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு லேசான மழை, நீலகிரி, தென் தமிழகம், வடக்கு உள் தமிழ்நாட்டில் மிதமான மழை. வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, திங்கட்கிழமை நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் லேசான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பநிலையை பொருத்தவரை, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.