– விளம்பரம் –
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது சீசனானது கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் எந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது? என்று குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
அடுத்த 3 போட்டிகள் மிட்சல் ஸ்டார்க் விளையாட மாட்டார் :
இந்த 19வது ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக நடைபெற முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க்கும் காயம் காரணமாக இந்த தொடரின் ஆரம்ப கட்டப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
– விளம்பரம் –
அதன் பின்னர் நிச்சயம் ஸ்டார்க் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் மூன்று போட்டிகளிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக அவர் விளையாட மாட்டார் என்றும் அதன் காரணமாக இம்மாத இறுதிவரை அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதற்கு காரணம் யாதெனில் : தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ள மிட்சல் ஸ்டார்க்கின் உடற்தகுதியை சோதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அவருக்கு முழு உடற்தகுதியை எட்டியதற்கான சான்றிதழை கொடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதியின்றி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளால் தான் என்னுடைய சர்வதேச கரியர் முடிவுக்கு வந்தது – கெவின் பீட்டர்சன் வெளிப்படை
எனவே அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் கெடுபடியால் அடுத்த மூன்று போட்டிகளை அவர் தவறவிட இருக்கிறார். இருப்பினும் அதன்பின்னர் நிச்சயம் லீக் சுற்றுப்போட்டிகளின் இறுதி கட்டத்தில் அவர் டெல்லி அணியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
விளம்பரம்