வலுவடைந்தது தாழ்வு மண்டலம்.. எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – முழு விவரம் – Kumudam


தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 980 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 1050 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்று வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27ஆம் தேதியை பொறுத்தவரை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி  மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Thank You

Related Posts

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு…

காற்றழுத்த தாழ்வு பாதை, 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப்பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }