கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மம்மூட்டி நடிப்பில் அண்மையில் வெளியான ‘களம்காவல்’ நல்ல வரவேற்பை பெற்றது. மோகன்லால் நடித்த ‘விருஷபா’ பெரும் தோல்வியை சந்தித்தது.
நீண்ட காலத்திற்கு பிறகு மலையாள சினிமாவின் இருபெரும் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ போஸ்டர் வெளியாகியுள்ளது.
மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பேட்ரியாட்’. மலையாள சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்மூட்டி நடிப்பில் அண்மையில் வெளியான ‘களம்காவல்’ நல்ல வரவேற்பை பெற்றது. மோகன்லால் நடித்த ‘விருஷபா’ பெரும் தோல்வியை சந்தித்தது. இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இணையும் ‘பேட்ரியாட்’ மலையாள திரையுலகில் இந்த ஆண்டு அதிகம் வசூலிக்கும் படமாக இருக்கும் என தெரிகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் தற்போது ‘பேட்ரியாட்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆக்சன் போஸ்டராக வெளியாகியுள்ள இது, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு