கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை தடை செய்த கேரள உயர்நீதிமன்றம், படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்தது.
“தி கேரளா ஸ்டோரி-2” திரைப்படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டு, பட வெளியீட்டிற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலரில் சில பெண்கள் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை தடை செய்த கேரள உயர்நீதிமன்றம், படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்தது. அப்போது, படத்தின் டீசர் மற்றும் டிரைலரை பார்க்கும் போது, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாக படம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக நீதிபதி பெச்சு குரியன் தெரிவித்தார்.
மேலும், அமைதியான மாநிலமான கேரளாவை பற்றி தவறான பார்வையை ஏற்படுத்தும் வகையில் படம் அமைந்திருக்கும் என்று எண்ணுவதாக நீதிபதி குறிப்பிட்டார். எனவே, மத்திய தணிக்கை வாரியம் இப்படத்தை மறு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்ட கேரள உயர்நீதிமன்றம், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு