– விளம்பரம் –
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியிருந்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக க்ருனால் பாண்டியாவின் சிறப்பான பங்களிப்பும் பார்க்கப்பட்டது. ஏனெனில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அவர் பந்துவீச்சாளராக இருப்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அந்த அணியின் வெற்றிக்கு கை கொடுத்திருந்தார்.
எனது சிறப்பான செயல்பாட்டுக்கு காரணம் அவர்தான் : க்ருனால் பாண்டியா
தேவைப்படும்போது அதிரடியாக ரன்களை விளாசும் அவர் பந்து வீச்சிலும் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தும் வீரராக செயல்பட்டிருந்தார். கடந்த ஆண்டு தான் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் வாங்கப்பட்ட க்ருனால் பாண்டியா அந்தத் தொடருக்கு முன்னதாகவே :
– விளம்பரம் –
நிச்சயம் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணி வெற்றி பெறும் என்றும் அதற்கு தன்னுடைய பங்களிப்பு இருக்கும் என்றும் கூறியிருந்தார். அவர் கூறியது போன்றே தான் ஆர்.சி.பி அணியில் இணைந்த முதல் ஆண்டே கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி என்று தற்போது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
17 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்.சி.பி அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. அதில் என்னுடைய சிறிய பங்களிப்பும் இருந்ததால் இன்னமும் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு நான் சொன்னது அப்படியே நடந்திருக்கிறது. மேலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இது வெறும் தொடக்கம் மட்டும் தான். ஆர்சிபி அணியில் நான் சிறப்பாக செயல்பட காரணமே பயிற்சியாளர் குழுவில் இருக்கும் மலோலன் தான்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : நான் நெனச்சது வேற.. ஆனா நடந்தது வேற.. ரவீந்திர ஜடேஜாவின் இடமாற்றம் குறித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
அவர் என்மீது நம்பிக்கை வைத்து எனது பந்துவீச்சில் பவுன்சர் போடவும், மெதுவாக வீசவும் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். பயிற்சியாளர் குழுவிலிருந்து இப்படி ஒரு ஆதரவு நமக்கு கிடைத்து சில ஆலோசனைகளும் வரும்போது அது மேலும் நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும் என க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்