– விளம்பரம் –
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக இருக்கும் சிஎஸ்கே அணியுடன் இணைந்து முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மும்பை அணி கோப்பையை வெல்லாததால் இம்முறை நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான கம்பேக் கொடுத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு தீவிரமாக தயாராகி வருகிறது.
பாண்டியாவுக்கு பதிலா இவரை கேப்டனாக்குங்க : சீக்கா கருத்து
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டார். அவர் வந்ததிலிருந்து மும்பை அணி பலமாக பார்க்கப்பட்டாலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
– விளம்பரம் –
அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களும் அற்புதமான வீரர்கள் என்பதனால் அவர்களுக்கு கேப்டன் பதவி மாற்றம் செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அண்மையில் 2026 டி20 உலக கோப்பையை வென்ற சூரியகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : மும்பை அணி பேட்டிங், பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் என அனைத்திலும் வலுவாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த அணியில் ஏகப்பட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தும் கோப்பையை வெல்லாமல் இருப்பது ஏமாற்றம்தான். என்னை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் டி20 உலக கோப்பையை வென்ற சூரியகுமார் யாதவை கேப்டனாக மாற்ற வேண்டும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : தம்பி உனக்கு 25 வயசு ஆகுது.. இன்னும் 20ன்னு நெனச்சிட்டு இருக்காத.. அபிஷேக் சர்மாவுக்கு – ஏ.பி.டி அட்வைஸ்
90% வெற்றி சராசரியுடன் இருக்கும் அவர் கேப்டன் பதவிக்கு வந்தால் சரியாக இருக்கும். ஆனால் ஹார்டிக் பாண்டியாவே சென்று சூரியகுமார் யாதவை கேப்டனாக இருக்கட்டும் நான் சாதாரண வீரராக விளையாடுகிறேன் என்று சொல்ல வேண்டும். அப்படி நடந்தால் தான் சூரியகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக மாற முடியும் என்றும் ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்