சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படவுள்ள இஷான் கிஷன்.. என்ன காரணம்?

இஷான் கிஷன் எஸ்ஆர்எச்

– விளம்பரம் –

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் மார்ச் 28-ஆம் தேதி துவங்கும் இந்த 19-வது ஐபிஎல் சீசனானது மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது வீரர்களை ஒருங்கிணைத்து அவர்களது சொந்த மைதானத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் இஷான் கிஷன் :

இந்நிலையில் இந்த தொடருக்கான பத்து அணிகளிலும் சில குறிப்பிட்ட முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலும் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

– விளம்பரம் –

இப்படி இஷான் கிஷன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட காரணம் யாதெனில் : அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பேட் கம்மின்ஸ் ஏற்கனவே காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரை தவறவிட்டார். அதுமட்டுமின்றி அவர் இன்னமும் முழுமையாக காயத்திலிருந்து குணமடையாததால் அவர் எப்போது ஹைதராபாத் அணியுடன் இணைவார்? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக இந்த நெருக்கடியான நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் ஆரம்பகட்ட போட்டிகளில் இஷான் கிஷன் கேப்டனாக வழிநடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சமீபத்தில் ஜார்கண்ட் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய இஷான் கிஷன் முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி தொடரின் கோப்பை கேப்டனாக கைப்பற்றி கொடுத்தார். அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பேட்டிங்கிலும் 517 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : 2018-லயே வருணை எடுக்க சொல்லி கேட்டேன்.. ஆனா அவங்க என் பேச்சை மதிக்கல – ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்

அதன் காரணமாக 2026 டி20 தொடரிலும் இடம் பிடித்து 317 ரன்கள் குவித்து அசத்திய அவர் தனது திறனை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதன் காரணமாக அவரை சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகமும் கேப்டனாக நியமிக்கப்பட விரும்புகிறது. இதனாலே 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்

Thank You

Related Posts

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 11 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }