விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க கோரிய வைகோ வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – Kumudam

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் படுகொலை செய்யப்பட்ட  சம்பவத்தை தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும்.

கடந்த 2014- ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். நிலுவையில் உள்ள இந்த வழக்கு  நீதிபதிகள் அனிதா சுமந்த் சுதிர் குமார் அமர்வில் இன்று விசாரணைக் வந்தது.

அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, டெல்லி உயர்நீதிமன்றம், வைகோ ஆட்சேபனை மனுவை நிராகரித்ததுள்ளது என்றும் வைகோ பாதிக்கப்பட்ட நபர் அல்ல என்றும் , அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றும் தெரிவித்தார்.2014 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு காலவதிஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டார். அப்போது வைகோ, தான் விடுதலை புலிகள் ஆதரவாளர் என்றும்,ஏற்கனவே தீர்ப்பாயத்தில் ஆஜராகியுள்ளேன், குறுக்கு விசாரணை நடத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.மேலும் விடுதலைப்புலிகள் போராட்ட வரலாற்றையும் விவரித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ,2024 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி வைகோ வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்..’

Thank You

Related Posts

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 7:49 PM IST சாய்குமாரை தமிழக தலைமை செயலாளராக நியமித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த பொது நல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக…

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 2:58 PM IST சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. கோப்பு படம் வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 12 views
தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

  • By admin
  • April 22, 2026
  • 2 views
Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 9 views
“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 16 views
AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam
.site-info { display: none; }