TN Rain | தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை… வாழை மரங்கள், வெற்றிலை கொடிகள் சேதம்… விவசாயிகள் வேதனை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

Tamil Nadu Rain | கோவில்பட்டியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், சாலையில் நீர்பெருக்கெடுத்தது.

விரைவான வாசிப்பு
கனமழையால் சேதம்
கனமழையால் சேதம்

தமிழ்நாட்டில் விருதுநகர், கோவில்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது.

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோவில்பட்டியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், சாலையில் நீர்பெருக்கெடுத்தது. மந்திதோப்பு சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூலக்கரை, பாண்டியன் நகர் அல்லம்பட்டி, சின்னவள்ளி குளம், சத்திர ரெட்டியார்பட்டி, கே. உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், சின்னாளப்பட்டி, ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், உதகை நகரில் அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சாலை, மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், காந்தள் போன்ற பகுதிகளிலும், உதகையைச் சுற்றியுள்ள முத்தோரைப்பாலாடா, நஞ்சநாடு, தலைக்குந்தா, கல்லட்டி போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

கனமழை – வாழை மரங்கள் சேதம்!

பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றில் 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்த நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வடக்கிபாளையம், சி.கோபாலபுரம், கருமாண்ட கவுண்டனூர், ஆர்.பொன்னாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

வெற்றிலை கொடிகள் சேதம்!

அதேபோல், தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த மேல் மங்கலம், ஜெய்மங்கலம், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த வெற்றிலை கொடிகள் சூறைக்காற்றில் விழுந்து சேதமாகின. ஏற்கனவே நஷ்டத்தில் வாழும் தங்களால் மேற்கொண்டு புது இழப்புகளை எதிர்கொள்ள முடியாது எனவும் அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



Thank You

Related Posts

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – மதுகேசவ் பொற்கண்ணன் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }