Guru peyarchi palan 2024: குரு பெயர்ச்சி.. திடீர் யோகம்.. மே 1 முதல் குரு பகவானின் அருள் மழை யாருக்கு? – Kumudam


துலாம்:  குரு பெயர்ச்சியால் மே 1ஆம் தேதி முதல் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. குருவின் அருள் பார்வையால் உங்களுக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும்.  வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்:  ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் தொட்டது துலங்கும். குருவின் அருள் பார்வை உங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு செல்லப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகம் கிடைக்கும். 

தனுசு: குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புரமோசனும் சம்பவ உயர்வும் கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார்.  சுப காரியங்கள் கை கூடி வரும். சுப விரையங்கள் ஏற்படும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். 

மகரம்: குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார்,  குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது.  வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய கௌரவப் பதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

கும்பம்: சனி பகவனை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்.

மீனம்:  குரு பெயர்ச்சியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம்.  குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். மூன்றாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலனால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. வீடு தேடி அதிர்ஷ்ட தேவதை வரப்போகிறார்.



Thank You

  • Related Posts

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு – Kumudam

    நிதானமாகச் செயல்பட்டா, நிம்மதி நிலைக்கும் ஆண்டுங்க. பணியிடத்துல உங்க திறமைக்கு ஏற்ப புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம்க. சக ஊழியர்கள் ஆதரவு சந்தோஷம் தரும்க. அதேசமயம் மறைமுக எதிரிகள் மேலிடத்துக்கும் உங்களுக்கும் இடையில சிண்டுமுடியலாம், கவனமா இருங்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும்…

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை – Kumudam

    கன்னி: அலுவலகத்துல அல்லவை நீங்கி நல்லவை அதிகரிக்கத் தொடங்கும்க. எட்டாக் கனியாக இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடி வரும்க. மேலிடத்தால் உங்க திறமை உணரப்பட்டு பெருமை சேரும்க. உடன் பணிபுரியும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. தொடர் உழைப்புனால களைப்பு ஏற்பட்டாலும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

    • By admin
    • April 23, 2026
    • 5 views
    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

    Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    • By admin
    • April 23, 2026
    • 5 views
    Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

    • By admin
    • April 23, 2026
    • 13 views
    மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

    2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

    • By admin
    • April 23, 2026
    • 9 views
    2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

    பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

    • By admin
    • April 23, 2026
    • 6 views
    பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

    ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

    • By admin
    • April 23, 2026
    • 6 views
    ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
    .site-info { display: none; }