– விளம்பரம் –
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த சில ஆண்டுகளாகவே தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டதற்கு பிறகு மும்பை அணி சில மோசமான தோல்விகளையும் சந்தித்திருந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு மீண்டும் சிறப்பாக கம்பேக் கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 ஆண்ட்ரே ரசல் இருக்காங்க : டூபிளெஸ்ஸிஸ்
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு காத்திருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் குறித்தும், இந்த தொடரில் விளையாட இருக்கும் வீரர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.
– விளம்பரம் –
அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டூப்ளிசிஸ் மும்பை அணியிடம் இரண்டு ஆண்ட்ரே ரசல் போன்ற வீரர்கள் இருப்பதாக மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாகவே பெரியளவில் சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த ஆண்டு அவர்களுடைய ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு ஆண்ட்ரே ரசல் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஷெர்பேன் ரூதர்போர்டை கவனித்தால் சமீபகாலமாகவே டி20 போட்டிகளில் அவர் உச்சகட்டமான பார்மில் இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் பந்தை அடித்து நொறுக்குகிறார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : நாதன் எல்லிஸ், மிட்சல் ஸ்டார்க் ஆகியோரை தொடர்ந்து பஞ்சாப் அணியிலும் ஒரு – நட்சத்திர வீரர் விலகல்
அதேபோன்று மற்றொரு வீரரான வில் ஜாக்ஸ் ஆரம்பத்தில் துவக்க வீரராக தனது கரியரை துவங்கி இருந்தாலும் தற்போது போட்டியை முடித்து கொடுக்கும் வீரராக மாறியுள்ளார். அதுமட்டும் இன்றி சுழற்பந்து வீச்சையும் கையில் எடுத்துள்ளார். இவர்கள் இருவருமே ஆண்ட்ரே ரசல் போன்ற திறமையை உடையவர்கள். நிச்சயம் அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் எச்சரிக்கை வழங்கும் வகையில் டூப்ளிசிஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்