தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் – எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்



எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளை எமோஷனல் பிளாக்மெயில் செய்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தான் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல இருக்கும் விஷயத்தை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்துள்ள நிலையில், ஜெயிலுக்கு போகும் முன் தன் பெயரில் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தன்னுடைய தம்பிகளிடம் வழங்க முடிவெடுத்து, இதற்காக ஆடிட்டரை வர வைத்து, அதற்கு தேவையான டாக்குமெண்டுகளில் தன் தம்பிகளை கையெழுத்து போடச் சொல்கிறார். ஆரம்பத்தில் இதற்கு அவரது தம்பிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

தம்பிகள் கையெழுத்து போட மறுத்ததால் கடுப்பான ஆதி குணசேகரன் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினார். நீங்கள் கையெழுத்து போடாவிட்டால், இந்த வீட்டுக்குள் நான் வரமாட்டேன் என சொல்கிறார். இதனால் வேறு வழியின்றி தாங்கள் கையெழுத்து போட்டு கொடுப்பதாக சொல்கிறார்கள். பின்னர் வீட்டுக்குள் சென்றதும், ரேணுகாவை சொம்பில் பால் எடுத்து வரச் சொல்லி, அதனை மீனாட்சி முன் வைத்து அதில் சத்தியம் செய்துவிட்டு கையெழுத்து போடுமாறு கூறுகிறார். அவரின் பேச்சைக் கேட்டு, கதிரும், ஞானமும் சத்தியம் செய்துவிட்டு அந்த பேப்பரில் கையெழுத்து போடுகிறார்கள்.

இதையடுத்து ஜனனியின் ரூமுக்கு சென்ற ரேணுகா மற்றும் நந்தினி, அவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அவரோ தான் எது சாப்பிட்டாலும் வாந்தி வருவதாக கூறி சாப்பிட மறுக்கிறார். அதன்பின்னர் சக்தியிடம் சொல்லி, வாந்தி நிற்பதற்கு மாத்திரை வாங்கி வரச் சொல்கிறார்கள். பின்னர் நந்தினி தன்னுடைய ரூமுக்கு சென்று தைலம் எடுக்க சென்ற நிலையில், அவருக்கு ஸ்கூலில் இருந்து போன் வருகிறது. அப்போது அவருடைய மகள் தாராவைப் பற்றி பேசுகிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டில் சண்டை, அதனால் தான் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என சொல்வதாக சொல்கிறார்.

பின்னர் ரூமில் சக்தியின் மடியில் படுத்திருக்கும் ஜனனியிடம் நைட்டு தூங்குனியா இல்லையா என சக்தி கேட்க, இரவு தூக்கமே வரவில்லை எனக் கூறும் ஜனனி, ரொம்ப டிஸ்டர்ப் ஆக இருந்தது என சொல்கிறார். மறுபுறம் அறிவுக்கரசி வீட்டிற்குள் வந்து ஹாலில் உள்ள மீனாட்சி போட்டோவின் முன் விளக்கு பொறுத்தப் பார்க்கிறார். அப்போது ரூமில் இருந்து வெளியே வரும் விசாலாட்சி, அவரைத் தடுத்து நிறுத்தி, நீ இதெல்லாம் பண்ணக் கூடாது என தடுக்கிறார். நான் விளக்கு பொறுத்தக் கூடாதா என கேட்க, அதற்கு விசாலாட்சி, நீ உங்க வீட்ல போய் பண்ணு, இங்க பண்ணாத என திட்டுகிறார்.

இதையடுத்து விளக்கு பொறுத்தாமல் வெளியே செல்கிறார் அறிவுக்கரசி. பின்னர் காஃபி கொடுக்க வந்த ரேணுகாவிடம், நந்தினியை பற்றி விசாரிக்கிறார் விசாலாட்சி. அப்போது அவரும், கதிரும் ஸ்கூலுக்கு சென்றிருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆகும் ஞானம். உடனே தன் பங்கிற்கு பாச மழை பொழிய வேண்டும் என முடிவெடுத்து, உடனே தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை பார்க்க செல்லலாம் என கிளம்புகிறார். அவரை தடுத்து நிறுத்தும் ரேணுகா, எதுக்காக போகணும் என துருவி துருவி கேட்கிறார். இதையெல்லாம் மாடியில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார் குணசேகரன். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.



Thank You

Related Posts

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }