கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
கட்சியின் முழு பலத்தையும் பயன்படுத்தி, அந்த இளம் வேட்பாளரின் அரசியல் எதிர்காலத்தையும் அவர் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கையையும் திமுக பெறும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணிக்கினற்னர்
அவிநாசி தனித் தொகுதியில் திமுக வேட்பாளராக அருந்ததி சமூகத்தை சேர்ந்த மருத்துவர் கோகிலாமணி அறிவிக்கப்பட்டுள்ளார். 26 வயதான இவர் திமுக வின் இளம் வேட்பாளர் ஆவார். இவருடைய தந்தை வெங்கிட்டான், தாய் வெங்கிட்டம்மாள் விவசாயக் கூலி வேலையாவார்.
2018ம் ஆண்டு மலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமையலர் பாப்பாள் சமைத்த மதிய உணவை பிற சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என பெற்றோர், ஊர் பொதுமக்கள் தீண்டாமையில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்ற அதே பகுதியில் இருந்து, அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் மருத்துவரை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021ல் மருத்துவப் படிப்பை முடித்து கோகிலா மணி தற்போது அவிநாசி வட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். 2022 ஆம் ஆண்டு முதல் திமுக செய்யூர் ஒன்றிய மருத்துவர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவினாசி தொகுதியில் அஇஅதிமுக செல்வாக்கு பெற்ற காட்சியாகும். 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவினாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இந்தமுறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுளளது. மேலும், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்த தொகுதியில் மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான எல். முருகன், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவிநாசியை உள்ளடக்கய நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். தேர்தலுக்கு பிறகும் அவிநாசி தொகுதியை குறிவைத்து வேலை செய்தததாக கூறப்படுகிறது. அவிநாசி ஒரு காலத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை. இப்போது அங்கு பாஜக தனது வேர்களைப் பரப்பி வரும் நிலையில், வலுவான அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை திமுக நிறுத்தியிருப்பது, பாஜகவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறதா என்ற விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இருப்பினும், கட்சியின் முழு பலத்தையும் பயன்படுத்தி, அந்த இளம் வேட்பாளரின் அரசியல் எதிர்காலத்தையும் அவர் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கையையும் திமுக பெறும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணிக்கினற்னர். ஆதித்தமிழர் பேரவை போன்ற அருந்ததியர் அமைப்புகளுக்கு இந்த முறை சீட் வழங்கவில்லை. எனவே, மருத்துவர் கோகிலாமணியின் வெற்றியை திமுக கூட்டணி கட்சிகள் உறுதி செய்யம் என்றும் கருதுகின்றனர். 2021ல் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் எல். முருகனுக்கு எதிராக கயல்விழி செல்வராஜ் நிறுத்தி வெற்றி கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுக்கப்பட்டது.
மார்ச் 28, 2026 11:24 PM IST