டிச.12-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா : விடுப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை திட்டம் : ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் – Kumudam

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 1.14 கோடி மகளிருக்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும்  நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 28 லட்சம் மகளிர் உரிமை கோரி விண்ணப்பித்தனர்.

இதனிடையை சிவகாசியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி:  “கடந்த இரண்டரை ஆண்டுகளாக 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தடைகளையும் தாண்டி தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தற்போதைய சூழலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம்12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்கள் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். பெரியாரின் சிந்தனைகளை சட்டமாக்கியவர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது முத்தமிழறிஞர் கலைஞர். இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் பெண் காவலர்களை நியமித்ததே கலைஞர்தான். தற்போது மகளிர் கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட மகளிர் வளர்ச்சி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொண்டு வந்துள்ளது,”என பேசியுள்ளார்.

Thank You

Related Posts

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 2:58 PM IST சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. கோப்பு படம் வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில்…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – மதுகேசவ் பொற்கண்ணன் சொற்களுக்கு உயிர் இருக்கின்றது. என்னது? உயிரா? சொற்களுக்கா? ஆம் நண்பர்களே!  நாம் பேசும்போது ஏதோ வார்த்தைகள்தானே என்று அள்ளித் தெளித்து  பேசுவதாக எண்ணுகிறோம். ஆனால், அந்த சொற்களுக்கு உயிர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது
.site-info { display: none; }