செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அடிதடி,ரகளை,மண்டை உடைப்பு கலவரமான கல்யாண மண்டபம்  – Kumudam

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா கோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்  கடந்த புதன்கிழமை சுமித் கேஷர்வானி என்ற மணமகனுக்கும், அவரது காதலிக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பதேபூருக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வந்திருந்தனர். மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் அந்த இடத்தை அடைந்தனர். மாலை மாற்றுதல் உள்ளிட்ட ஆரம்ப விழாக்கள் அமைதியாக நிறைவடைந்தன.

அதிகாலை 4 மணியளவில், திருமண பீடத்தில் நகைகள் வழங்கும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​மணமேடை அருகே கட்டப்பட்டு இருந்த மணமகளின் வளர்ப்பு நாய் குரைக்கத் ஆரம்பித்தது. இதனால் எரிச்சல் அடைந்த மணமகன் தரப்பு இளைஞன் அந்த நாயை அடித்தார். இதைப்பார்த்த மணபெண், அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். அந்த இளைஞரை மணபெண் சத்தம் போட்டார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் கம்புகள், நாற்காலிகளால் தாக்கிக்கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்த திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோதலை தடுத்தனர். இதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் மணமகள் இனி திருமணத்தைத் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திருமணம் நின்று போனது. இருதரப்பிலும் வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் திருப்பித் தரப்பட்டன. இந்த மோதல் தற்போது சோசியல் மீடியாக்களில்  வைரலாகி வருகிறது.

Thank You

Related Posts

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

அறிமுகம் டிஜிட்டல் மாற்றம் நாம் வாழும் மற்றும் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியமைக்கும் சகாப்தத்தில், கர்நாடகாஒன் இந்தியாவில் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாக வெளிப்படுகிறது. பல அரசு சேவைகளை ஒரே டிஜிட்டல் தளமாக ஒருங்கிணைப்பதன்…

வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கை இருங்க  – அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ் – Kumudam

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க.வினர், எப்படி புறவாசல் வழியாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

  • By admin
  • April 26, 2026
  • 9 views
எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ

விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 26, 2026
  • 8 views
விஜய் ஃபேக்டரும், 85% வாக்குப்பதிவும்: தமிழக அரசியலில் நிகழ்ந்துள்ள ‘சைலண்ட்’ மாற்றமா? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

  • By admin
  • April 26, 2026
  • 8 views
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

  • By admin
  • April 26, 2026
  • 11 views
மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 11 views
கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்
.site-info { display: none; }