நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை – Kumudam

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள என பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷா எப்போதும் பிஸியாக நடிகையாக உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் இல்லம் மற்றும் அங்குள்ள பங்களாதேஷ் துணை தூதரகத்திற்கு மர்ம நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்த போலீசார் அந்தப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், அந்த மிரட்டல்கள் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த 11 ஆம் தேதி போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் வீடுகளில் 5 ‘ஆர்டிஎக்ஸ்’ (RDX) ரக வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் வெடிக்கும் என்றும் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

மேலும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த மிரட்டல்களை விடுத்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் போன் மற்றும் மின்னஞ்சல் மூலம் வருவது தொடர் கதையாகி வருகிறது. இப்படி வரும் மிரட்டல்களை போலீசார் சோதனை நடத்தினார். அது உண்மை இல்லை என்பது பிறகு தெரிய வருகிறது. அதே நேரம் இப்படிப்பட்ட புகார்களை தவிர்க்கவும் முடியாத சூழ்நிலை உள்ளதால் போலீசாருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

Thank You

Related Posts

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

பிப்ரவரி 28, 2026 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில், தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள்…

தன்னை இயேசுவாக சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை  – Kumudam

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கிறிஸ்துவ மதத் தலைவரான 14 ஆம் போப் லியோ தொடர்ந்து கண்டித்து வருகிறார். நேற்றைய தினம் செய்தியாளர்களுடன் பேசிய  டிரம்ப், போப் லியோ குற்றச்செயல்கள் மீது விருப்பம் கொண்டவராக நான் நினைக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }