கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
‘பிக் பிட்ச்சர்’ என்ற முதல் பான் இந்தியா ரியாலிட்டி ஷோவை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘பிக் பிட்ச்சர்’ என்ற முதல் பான் இந்தியா ரியாலிட்டி ஷோவை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Gammen Sports and Entertainment Pvt. Ltd.) ‘பிக் பிட்ச்சர்’ (‘Big Pitchure’) என்ற ரியாலிட்டி ஷோவை அறிமுகப்படுத்தியுள்ளது. திரைப்பட உருவாக்கத்தை நேரடியாக ரசிகர்களிடமே ஒப்படைக்கும் இந்த நிகழ்ச்சி, விரைவில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.
‘இவ்வளவு காலம் படங்களை விமர்சனம் செய்தீர்கள், இப்போது ஒரு படத்தை உருவாக்கிப் பாருங்கள்’ என்ற சவாலை இந்த நிகழ்ச்சி முன்வைக்கிறது. இதில் பார்வையாளர்கள் தாங்களே நேரடியாக எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களாக மாறி திரைப்படங்களை இயக்க முடியும். இறுதியில் இந்த திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கதை தேர்வு, ஆடிஷன் என ஒவ்வொரு எபிசோடும் நகரும். சிறந்த கதைகளை பார்வையாளர்களுடன் நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் அடுத்த எபிசோடில் ஸ்கிரிப்ட், நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்ப குழு இறுதி செய்யப்படும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 60 நிமிட எபிசோடுகளாக 15 வாரங்கள் நீளும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் தனித்துவமான கட்டங்களாக விரிகிறது. இறுதி எபிசோடில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பான்-இந்தியா பார்வையாளர்களுக்கான முழுநீள திரைப்படத்தை உருவாக்குவார்கள்.
நிகழ்ச்சியை தமிழில் பரத், மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என். சிம்ஹா, இந்தியில் விஜய் ராஸ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். மேலும், இது ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகும்.