செமி பைனல் போட்டியில் இந்திய அணிக்கு டப் கொடுக்கபோகும் 3 இங்கிலாந்து வீரர்கள்

பத்ரிநாத்

– விளம்பரம் –

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கக்கூடிய 3 வீரர்கள் : பத்ரிநாத் கணிப்பு

இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் இருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியை சந்தித்திருக்கிறது. அதேபோன்று இங்கிலாந்து அணியும் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நாளைய போட்டியில் வெற்றி பெறப்போவது எந்த அணி? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

– விளம்பரம் –

அதோடு இந்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாலும் ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த அரையிறுதி போட்டியில் சவால் அளிக்கப்போகும் மூன்று இங்கிலாந்து வீரர்கள் குறித்த தனது கணிப்பினை முன்னாள் இந்திய வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் ஹாரி புரூக் மிக சிறப்பான ஃபார்மில் இருப்பதாலும் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர் என்பதாலும் அவர் இந்திய அணிக்கு ஒரு சவாலாக இருப்பார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? – உத்தேச பட்டியல் இதோ

அதேபோன்று ஆர்ச்சர் வான்கடே மைதானத்தில் இருக்கும் கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகத்தை பயன்படுத்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்று பார்க்கிறேன். அதேபோன்று மூன்றாவது வீரராக ஆதில் ரஷீதை நான் பார்க்கிறேன். ஏனெனில் மெதுவாக பந்து வீசக்கூடிய அவர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும்போது அவரை எதிர்கொள்வது கடினமாக மாறும். அவரை எதிர்கொள்ள சரியான கால் நகர்வுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

  • By admin
  • April 23, 2026
  • 6 views
ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
.site-info { display: none; }