– விளம்பரம் –
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதினர். இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.
சேப்பாக்கத்தில் ஆயுஷ் மாத்ரே நிகழ்த்திய சாதனை :
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்தது.
– விளம்பரம் –
சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 73 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோன்று ஷிவம் துபே 27 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 45 ரன்கள் குவித்து அசத்தினார். இவர்களது அதிரடியான ஆட்டம் காரணமாக சென்னை அணி 200 ரன்களை கடந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் 43 பந்துகளை சந்தித்து 73 ரன்களை குவித்த ஆயுஷ் மாத்ரே சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்ததன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த வயதில் ஐபிஎல் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : விராட் கோலியிடம் இருந்து ரகுவன்ஷி இதை கத்துக்கனும்.. அறிவுரை கூறிய வீரேந்திர சேவாக் – விவரம் இதோ
தற்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு 18 வயது 261 நாட்கள் ஆகிறது. இதன்மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த வயதில் அரை சதமடித்த வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரராக வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்