– விளம்பரம் –
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனான சுப்மன் கில்லை மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்குமான கேப்டனாக கொண்டுவர வேண்டும் என்று முடிவு எடுத்த இந்திய அணியின் நிர்வாகம் ஆசிய கோப்பை தொடருக்கான டி20 அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் அதிரடியாக விளையாட நினைத்து தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி இருந்தார்.
சுப்மன் கில் இதை செய்தால் போதும் : அஷ்வின் அறிவுரை
இதன் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக கில் கடைசி நேரத்தில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இஷான் கிஷன் கொண்டுவரப்பட்டார். அதனால் கில் ஏமாற்றம் அடைந்திருந்தாலும் இந்திய அணிக்கு அது நல்ல முடிவாக பார்க்கப்பட்டது. அதோடு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
– விளம்பரம் –
இந்நிலையில் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினும் மீண்டும் டி20 போட்டிக்கு கில் கம்பேக் கொடுக்க ஐபிஎல் தொடரில் 600-க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்க வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில்லை அகமதாபாத் மைதானத்தில் அவுட் செய்வது கடினமான ஒரு விடயம். அங்கு அவர் டான் போல மாறிவிட்டார். அதனால் அவர் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவருடைய வேலையெல்லாம் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடுவதை பற்றி யோசிக்காமல் தனக்கே உரித்தான பாணியில் விளையாடினால் மிகச் சிறப்பாக ரன்குவிப்பார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 2 மில்லியன் டூ 3.5 மில்லியன்.. ஐ.பி.எல் கேப்டனானது குறித்து பேசிய – பேட் கம்மின்ஸ்
அவரிடம் என்ன ஷாட் இல்லாமல் போகிறது? அவரிடம் எல்லாமே இருக்கிறது. எனவே ஸ்ட்ரைக் ரேட் பற்றி யோசிக்காமல் அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக அளவில் ரன்களை சேர்த்தால் நிச்சயம் மீண்டும் இந்திய டி20 அணிக்கு அவர் கம்பெக் கொடுக்க முடியும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்