– விளம்பரம் –
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றனர். அந்த வகையில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
எய்டன் மார்க்ரம் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அந்தவகையில் சூப்பர் 8 சுற்றில் தாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியும் எதிர்த்து வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்தது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக விளையாடி வரும் துவக்க வீரர் எய்டன் மார்க்ரம் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கு அரை சதத்துடன் 264 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவர் அடித்த இந்த 264 ரன்கள் மூலம் மூன்றாவது சர்வதேச கேப்டனாக டி20 உலக கோப்பை தொடரில் முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை டி20 உலக கோப்பை தொடர்களில் ஒரே தொடரில் 250-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த கேப்டனாக பாபர் அசாம் 303 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 257 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்து ஒரு டி20 உலககோப்பை தொடரில் 250-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த மூன்றாவது கேப்டனாக மார்க்ரம் தற்போது 264 ரன்கள் அடித்துள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா இதை மட்டும் சரி செய்தா போதும்.. வேறலெவல்ல கலக்குவாரு – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
அதுமட்டுமின்றி சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டியும், அரையிறுதியில் ஒரு போட்டியும் இருக்கிறது. ஒருவேளை அரையிறுதியிலும் வெற்றி பெற்றால் இறுதி போட்டி இருக்கிறது. எனவே இந்த மூன்று போட்டியிலும் சேர்த்து அவர் 40 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரே டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்