கூடுதல் தொகுதி வேணும்: அடம் பிடிக்கும் சிபிஎம், விசிக அலைய விடும் அறிவாலயம் – Kumudam

சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று திமுக – சிபிஎம் இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்கு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த மா.கம்யூ மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என திமுகவிடம் நாங்கள் வற்புறுத்தியுள்ளோம். நிறைய கட்சிகள் இருப்பதால் இந்தப் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வருவதில் சிரமங்கள் உள்ளன.

ஆகவே, கூடுதல் தொகுதிகளை கேட்ட கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் கலந்துபேசி இன்று இரவு சொல்வதாக திமுக தரப்பில் கூறியுள்ளனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இதில் முடிவு எட்டப்படும் என நம்புகிறோம். ஏப்ரல் 30-ஆம் தேதிதான் தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. எனவே, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய கால அவகாசம் உள்ளது.

புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், தொகுதிகளை குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் எங்களிடம் வலியுறுத்தினர். ஆனால், நாங்கள் அதனை ஏற்க முடியாது சொல்லிவிட்டோம். மார்க்சிஸ்ட் கடந்த முறை பெற்றதை விட கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதில் உறுதியாக இருப்பதால்தான் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் அதன் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுகின்றனர். எனவே காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைப் பெற்றது பற்றி கவலை இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்துக்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது” என கூறினார்.

திமுக தலைமையிடம் 12 தொகுதிகளை கொண்ட பட்டியலை விசிக கொடுத்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சுமார் 15 நாட்களை கடந்தும் இன்னும் நடைபெறவில்லை.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே  10 தொகுதி விடுதலை சிறுத்தைக்கு கட்சிக்கு ஒதுக்க வேண்டும். எனவே விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் வளர்ச்சியை புரிந்து திமுக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருப்பதாக தெரிவித்தனர்.

Thank You

Related Posts

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – Kumudam

நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி

  • By admin
  • April 27, 2026
  • 4 views
இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 13 views
விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

  • By admin
  • April 27, 2026
  • 15 views
காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 4 views
மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 12 views
ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam
.site-info { display: none; }