கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை, பெண் பாத்திரமாக மாற்றி தன்னை நடிக்க வைத்து விட்டதாக தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கலகலப்பாக பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை, பெண் பாத்திரமாக மாற்றி தன்னை நடிக்க வைத்து விட்டதாக தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் கலகலப்பாக பேசியுள்ளார்.
அரசியல் நையாண்டி கலந்த டிரெய்லரை வெளியிட்டு, தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரைக்கு வரும் படங்களில் ரசிகர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வைத்துள்ளது இந்த ‘தாய் கிழவி’.
மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கான ப்ரீ ரிலீஸ் (pre-release) நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சரத்குமார், ராதிகா சரத்குமார், சூரி, இளவரசு, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், தாய் கிழவி படம் எப்படி உருவானது என்பதையும், சினிமாவில் தான் யாருக்கும் போட்டியாக வரவில்லை என்றும் கூறினார். கொல பசியில் இருக்கும் தனக்கு ‘தாய் கிழவி’ எனும் படத்தை கொடுத்து சிவகார்த்திகேயன் ராஜவிருந்து அளித்திருப்பதாக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் மனம் நெகிழ்ந்து பேசினார்.
இந்த படத்தை எப்படியாவது பாரதிராஜாவை பார்க்க வைத்து விடு என்று நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் கூறியதற்கான காரணத்தை சொன்ன நடிகை ராதிகா சரத்குமார், இது நடிகர் ரஜினி நடிக்க வேண்டிய படம் என ட்விஸ்ட் வைத்தார்.
கடந்த 20 ஆம் தேதி தாய்கிழவி படம் வெளியாக திட்டமிட்டிருந்ததால், தான் நடித்த ஆழி படத்தை ஒருவாரம் கழித்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டது என்றும், ஆனால், இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.