– விளம்பரம் –
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வலிமையான அணிகளில் ஒன்றாக திகழ்ந்துவரும் ஆர்.சி.பி அணியானது 2025 ஆம் ஆண்டிற்கு முன்னர் பலமுறை இறுதிப்போட்டிக்கு சென்றாலும் ஒருமுறை கூட வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதில்லை. ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியிருந்தது. அவர்கள் பெற்ற வெற்றி ஆர்.சி.பி அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
விராட் கோலி தான் ஆர்.சி.பி அணியின் முதுகெலும்பு : ஏ.பி.டி பேச்சு
அதனை தொடர்ந்து இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் ஆர்.சி.பி அணியானது மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பலம் வாய்ந்த அணியாக தற்போது ஆர்.சி.பி அணி தொடர்ந்து இருந்து வருகிறது.
– விளம்பரம் –
அதனால் நிச்சயம் இம்முறையையும் கோப்பையை கைப்பற்றி அடுத்தடுத்து கோப்பைகளை வென்ற அணியாகவும் ஆர்.சி.பி அணி சாதனை நிகழ்த்த அதிக வாய்ப்புள்ளது. ஆர் சி பி அணியில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இருப்பதனால் அவர்கள் மற்ற அணிக்கு ஒரு சவாலான அணியாகவே இருப்பார்கள் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக விராட் கோலி குறித்து பேசியுள்ள ஏ.பி.டி வில்லியர்ஸ் பல சுவாரஸ்யமான கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போதைய ஆர்.சி.பி அணியில் அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்படுகிறார்கள். கடந்த ஆண்டு கூட ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் முன்வந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
– விளம்பரம் –
இப்படி தனிப்பட்ட வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலே கோப்பையை வெல்ல முடிந்தது. ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் உழைப்புக்கும் கிடைத்த பரிசாக கோப்பையை பார்க்கிறேன். இனிமேல் ஆர்.சி.பி அணியின் ஒட்டுமொத்த சுமையையும் விராட் கோலியால் சுமக்க முடியாது என்பது அவருக்கே தெரியும்.
இதையும் படிங்க : 6 மாசம் ஆச்சு.. எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டேன்.. எதற்கு தெரியுமா? – யுஸ்வேந்திர சாஹல் அதிரடி
ஆனாலும் விராட் கோலி அந்த அணியின் இதயம் போல் இருக்கிறார். களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி அவர் அணிக்குள் கொண்டுவரும் எனர்ஜி என்பது அபரிவிதமானது. அணியில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் அவர்தான் நம்பிக்கை கொடுக்கிறார் எனவே தற்போதும் அவர் ஆர்.சி.பி அணியின் முதுகெலும்பு தான் என ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்