– விளம்பரம் –
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்களது முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து பிப்ரவரி 22-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் முக்கிய போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் 2 கீ வீரர்கள் இவர்கள் தான் : ஆகாஷ் சோப்ரா
ஏற்கனவே லீக் சுற்று போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றினை நோக்கி தங்களது பயணத்தை துவங்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் இந்திய அணிக்கு சமபலம் வாய்ந்த அணியாக தென்னாப்பிரிக்க அணியும் இருப்பதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கடினமான ஒரு போட்டியாக அமையும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
– விளம்பரம் –
ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்றும் அதில் இரண்டு வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவருமே இந்த தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள். இந்திய அணியை பொருத்தவரை வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா ஆகிய இருவரும் வீசப்போகும் 8 ஓவர்கள் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும்.
– விளம்பரம் –
ஏனெனில் வித்தியாசமான பௌலிங் முறையை கொண்ட இவர்கள் இருவருமே எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் சவால் அளிக்கக் கூடியவர்கள். அதன் காரணமாக இவ்விரு வீரர்களையும் தாண்டித்தான் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணியால் வீழ்த்த முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை வெளியிட்ட – ஹர்பஜன் சிங்
அவர் கூறியது போன்றே நடைபெற்று வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி வெறும் 5.16 எக்கனாமியுடன் 9 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 3 போட்டிகளில் விளையாடி வெறும் 6 எக்கனாமியுடன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்