– விளம்பரம் –
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முதல் ஆட்டத்தில் மே 28-ஆம் தேதி ஆர்.சி.பி அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்த்து விளையாட சன்ரைசர்ஸ் அணி காத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு0 வந்தாலும் வெற்றிகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு மிகச் சிறப்பான கம்பேக் கொடுக்கும் வகையில் சன்ரைசர்ஸ் அணி விளையாட காத்திருக்கிறது.
250 ரன்கள் அடித்தாலும் சன் ரைசர்ஸ் ஜெயிக்காது : ஆகாஷ் சோப்ரா
இந்த 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் தவற விட்டுள்ளார் என்பதனால் புதிய கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் இம்முறை சன்ரைசர்ஸ் அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் நிச்சயம் பெரியளவில் இந்த தொடரில் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
– விளம்பரம் –
இவ்வேளையில் ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களை வைத்து 250 ரன்கள் அடித்தால் கூட அந்த அணி தோல்வியையே சந்திக்கும் என்கிற வகையில் விமர்சனம் செய்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பெரும் சரிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக பேட் கம்மின்ஸ் இல்லாததால் அவர்களது பந்துவீச்சு மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது. இஷான் மலிங்காவும் விளையாடாமல் போனால் அந்த அணி யாரை விளையாட வைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை? உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு சன் ரைசர்ஸ் அணியால் பெரியளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு மரியாதை அளிக்க கர்நாடக கிரிக்கெட் வாரியம் – எடுத்துள்ள முடிவு
எனவே என்னதான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு 250 ரன்களை எடுத்தாலும் அவர்களிடம் உள்ள பலவீனமான பந்துவீச்சு காரணமாக 250 ரன்கள் கூட அவர்களுக்கு பத்தாமல் போகலாம். எனவே எவ்வளவு ரன்கள் அடித்தாலும் சன்ரைசர்ஸ் அணி தோல்வியையே சந்திக்கும் என்று விமர்சித்து ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்