“பால் டாயில் பழனிசாமி..” எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு பதில் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்  | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

செய்தி18
செய்தி18

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது; “234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக முதல் வெற்றி ஆயிரம் விளக்கு தொகுதியின் வெற்றியாக இருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, என்னை நேரடியாக கெட்ட வார்த்தை சொல்லிதான் பேசவில்லை. நான் என்ன சொன்னேன். நீங்கள் பாஜகவுக்கு மிகவும் அடிமையாக இருக்கிறீர்கள். பாஜக என்ன சொன்னாலும் கேட்கிறீர்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம். இப்படி இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் முக்கியம். நம்முடைய மாநில உரிமைகள் முக்கியம்.

முரட்டுத் தொண்டர்களைப் பார்த்துப் பார்த்திருப்போம். முரட்டு பக்தர்களைப் பார்த்திருப்போம். முரட்டு அடிமையைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் பாஜகவின், மோடியின் ஒன்றாம் நம்பர் முரட்டு அடிமை என்று சொன்னேன்.

டெல்லிக்குப் போனால் நான்கு கார் மாறிப் போகிறீர்கள். முகத்தை மூடிக்கொண்டு வெளியில் வருகிறீர்கள். தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகளைப் பற்றி யோசியுங்கள் என்று சொன்னேன்.

இதற்கு அவர், உதயநிதிக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது? உண்மைதான், எனக்குப் பெரிய அனுபவம் கிடையாது. பதவிக்காக யார் காலில் விழுந்த அனுபவமும் எனக்குக் கிடையாது. சங்கிக் கூட்டத்துக்குப் பயப்படுகிற அனுபவம் எனக்குக் கிடையாது. நான் என்றைக்குமே மக்களோடு மக்களாக இருப்பேன் என்றேன்.

இதற்கு அவர், உதயநிதி பால் டாயில் சாப்பிட்டு எப்பொழுதோ செத்துப் போயிருக்க வேண்டும். ஏன் இங்கே இருந்து என் உயிரை வாங்குகிறார்? என்கிறார். எப்போதும் அவருக்குப் பால் டாயில் நினைப்பாகவே இருக்கிறது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதே தேர்தல் முடிவு  அவருக்குத் தெரிந்திருக்கிறது. இத்தனை நாள் வரைக்கும் பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்தவர், இன்று பால் டாயில் பழனிசாமியாக மாறியிருக்கிறார்” இவ்வாறு பேசினார்.



Thank You

  • Related Posts

    சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை…

    தமிழகத்தில் ரூ.1262 கோடி பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் தகவல்  – Kumudam

    சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளரை சந்தித்த அவர் தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

    • By admin
    • April 23, 2026
    • 6 views
    கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

    தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

    • By admin
    • April 23, 2026
    • 1 views
    தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

    சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

    • By admin
    • April 23, 2026
    • 8 views
    சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

    • By admin
    • April 23, 2026
    • 5 views
    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

    Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    • By admin
    • April 23, 2026
    • 5 views
    Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

    மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

    • By admin
    • April 23, 2026
    • 13 views
    மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்
    .site-info { display: none; }