இடியோடு கோடை மழை பெய்யும்.. குடையோட வெளியே போங்க.. வார்னிங் கொடுத்த வானிலை மையம் – Kumudam


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, பையூர் AWS (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 5, ஆம்பூர் (திருப்பத்தூர்), மேலாலத்தூர் (வேலூர்), தர்மபுரி (தர்மபுரி), தர்மபுரி PTO (தர்மபுரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 4, ஒகேனக்கல் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), டேனிஷ்பேட்டை (சேலம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), அரூர் (தர்மபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.  அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5° செல்சியஸ் (+7.2° செல்சியஸ்) ஈரோட்டில் 43.2° செல்சியஸ் (+5.7° செல்சியஸ்), திருச்சியில் (விமான நிலையம்)   42.7° (+4.6° செல்சியஸ்) மற்றும்  மதுரையில்  (விமான நிலையம்) 42.2° செல்சியஸ் (+4.6° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை வேலூரில்  42.6° செல்சியஸ், திருத்தணியில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், பாளையம்கோட்டையில் 41.2° செல்சியஸ், சேலம் & மதுரையில் 40.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° – 40° செல்சியஸ்     பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள்,   புதுவை    மற்றும் காரைக்கால்   பகுதிகளில் 35° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.1° செல்சியஸ் (+1.5° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.9° செல்சியஸ் (-0.5° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று ( மே 7) தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

நாளைய தினம் தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (09.05.2024) தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.05.2024 மற்றும் 11.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  13ஆம் தேதி வரைக்கும்
தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

11.05.2024 வரை தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய   மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 08.05.2024 முதல் 11.05.2024 வரை அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். 

07.05.2024 முதல் 11.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:  07.05.2024 முதல் 11.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும்  இருக்கக்கூடும். 

இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 07.05.2024 மற்றும் 08.05.2024 வரை: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  07.05.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாகவும், வரும் நாட்களில் வெப்ப அலை படிப்படியாக குறையும் என்று கூறிய உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை முதல் வருகிற மே 10 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேஷ் பகுதிகளில் புதிதாக வெப்ப அலை வீச வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தென்னிந்திய பகுதி மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வருகிற மே 11 ஆம் தேதி வரை இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Thank You

Related Posts

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு…

காற்றழுத்த தாழ்வு பாதை, 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப்பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 8 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 7 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 13 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்
.site-info { display: none; }