அக்னி நட்சத்திரம் இன்று முதல் ஆரம்பம்.. மே 6 வரை வெப்ப அலை.. கோடை மழையும் குளிர வைக்குமாம்! – Kumudam


சூரியன் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கும் காலம் அக்னி நட்சத்திர காலமாகும். சித்திரை மாதம் கடைசி 8 நாட்கள் தொடங்கி வைகாசி மாதம் 15ஆம் தேதி வரைக்கும் ( மே 4 முதல் 28 வரை) அக்னி நட்சத்திர காலமாகும். இந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை மழையும் இந்த கால கட்டத்தில் பெய்ய வாய்ப்பு உள்ளது. 

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.  நேற்றைய தினம் தமிழகத்தில்  4  இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 42°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39° – 40° செல்சியஸ்,     பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள்,   புதுவை    மற்றும் காரைக்கால்   பகுதிகளில் 36° – 40° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 25° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 06.05.2024 வரை  தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

07.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  

அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய   மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். 08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  03.05.2024 மற்றும் 04.05.2024 தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை 3°-5°  செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும். 

அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ்,  கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:  காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 

இன்றைய தினம் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 05.05.2024 மற்றும் 06.05.2024: வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ,    ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் 06.05.2024 வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.



Thank You

Related Posts

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு…

காற்றழுத்த தாழ்வு பாதை, 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப்பிரதேசம் முதல் தென்தமிழகம் வரை விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }