“ஜனநாயகம் காப்பது, தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு தான் பெஸ்ட்” தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்  – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 2 நாட்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்:, “தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளன. ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. அண்மையில் 72 நாடுகள் பங்கேற்ற பன்னாட்டுத் தேர்தல் மாநாட்டில் தமிழ்நாடு குறித்துப் பெருமையாகப் பேசினோம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18-19 வயதுடையவர்கள் 12.5 லட்சம் பேரும், 20-29 வயதுடையவர்கள் 1.05 கோடி பேரும் உள்ளனர். தமிழகம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.

தேர்தலின்போது அதிகாரிகள் அச்சமின்றிச் செயல்படலாம். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ச் செய்திகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருக்கும் போதே தபால் வாக்குகள் எண்ணப்படும். நாட்டுக்கே முன்னுதாரணமாக, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இந்தத் தேர்தல் நடத்தப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். இது சாமானிய மக்கள் எளிதாகத் தங்கள் வேட்பாளரை அடையாளம் கண்டு வாக்களிக்க உதவும். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படும். இதுவரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக 267 புகார்கள் வந்துள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்னரும், அதில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள நபர்கள் ‘படிவம் 6’ மூலம் தங்கள் பெயரைச் சேர்க்கலாம். ‘படிவம் 7’ மூலம் பெயர் நீக்கம் செய்யவும், ‘படிவம் 8’ மூலம் முகவரி மற்றும் தொகுதி மாற்றத்திற்கும் விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 7 முதல் 10 நாட்களுக்குள் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Thank You

Related Posts

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறிப்பிட்டு, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியினை அமெரிக்கா விதித்துள்ளது. இதில் 25 சதவீத வரி ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 25 சதவீத இம்மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது. இதனால்…

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் சமூக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 7 views
பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 3 views
மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

  • By admin
  • April 27, 2026
  • 7 views
உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies

  • By admin
  • April 27, 2026
  • 9 views
Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies
.site-info { display: none; }